நான்காவது “அயலக தமிழர் தினம்” நிகழ்வு நேற்றும், நேற்றுமுந்தினமும் தமிழ்நாட்டின் சென்னை வர்த்தக மையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
“எத்திசையும் தமிழணங்கே!” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 60 நாடுகளிலிருந்தும் 17 மாநிலங்களில் இருந்தும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
இவ் நிகழ்வில் தமிழ்நாடு அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பெயரில் சிறீதரன் எம்.பி அவர்கள் நிகழ்வின் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.