பொலன்னறுவை – பெதிவௌ பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற விருந்து ஒன்றின் போது, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நேற்று (12) 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் பேஸ்புக் ஊடாக இந்த விருந்தை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சட்டவிரோதமாக வைத்திருந்த 45 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மதுபான போத்தல்களும், 550 மில்லிகிராம் கொக்கைன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் 18 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்றைய தினம் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளனர்.