உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகக் கூட்டணி அமைத்துக் களமிறங்குவதற்கான பேச்சு தெற்கு அரசியல் களத்தில் முழு வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி, திசைகாட்டி சின்னத்தில் களமிறங்கும் நிலையில், பாரிய கூட்டணிக்குரிய முயற்சியில் எதிரணிகளே ஈடுபட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைக்கும் முயற்சி இடம்பெற்று வருகின்றது.
அத்துடன், இடதுசாரிக் கட்சிகளை ஒன்றிணைத்து கதிரை சின்னத்தில் களமிறங்குவதற்குரிய கலந்துரையாடல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஈடுபட்டுவருகின்றது.
சிங்கள தேசியவாத சக்திகளைக் கொண்டுள்ள சர்வஜன அதிகாரமும், புதிய கூட்டணியை உருவாக்குவதற்குரிய அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றது.
சிலிண்டர் கூட்டணியில் சங்கமித்த மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் சிலர், மீண்டும் மொட்டுக் கட்சிக்குள் செல்வது பற்றி அவதானம் செலுத்தி, அதற்குரிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.