நன்னேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகத்தேகம கல்கமுவ வீதியில், நேற்று வெள்ளிக்கிழமை (10) பாரவூர்தி ஒன்று நபரொருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மஹநன்னேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார்.
நவகத்தேகமவிலிருந்து கல்கமுவ நோக்கிச் சென்ற பாரவூர்தி ஒன்று வீதியோரத்தில் இருந்த நபர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நபர் நன்னேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் நன்னேரிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நன்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.