ஹட்டன் – டிக்கோயா பகுதியில் திடீர் சுகயீனம் காரணமாக 22 மாணவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 09 முதல் 10 வயதிற்கு இடைப்பட்ட மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உணவு விசமானமையால் அவர்களுக்கு, வயிற்று வலி, மயக்க நிலை மற்றும் வாந்தி போன்ற நோய் நிலைமைகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
எவ்வாறாயினும், அவர்களது உடல்நிலை மோசமாக இல்லை என டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.