பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் 07ம் ஆண்டு நிறைவு நிகழ்வும் வருடார்ந்த பொதுக்கூட்டமும் தனியார் விருந்தகத்தில் இன்று 10.01.2025 நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக. மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. உதயனி நவரத்தினம், சிறப்பு விருந்தினராக காவேரிக்கலா மன்றத்தின் பணிப்பாளர் அருட்தந்தை யோசுவா, பெண்கள் வாழ்வுரிமைச் சங்க உத்தியோகத்தர்கள், சிறுகுழுக்களைச் சேர்ந்தோர் என பலர் கலந்து கொண்டனர்.
கேக் வெட்டி ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டதுடன் குறித்த நிகழ்வில் சிறுதொழில் முயற்சியாளர்களும் கெளரவிக்கப்பட்டனர்.