மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் உஷ்ணமான காலநிலை காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக விமலசுரேந்திர, கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, காசல்ரீ, மவுசாகல, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
மவுசாக்கலை நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 13 அடி குறைந்த நிலையில் உள்ளது.
அதேபோல் ஏனைய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட குறைவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.