தென்னைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் முகமாக கண்டாவளை பிரதேச செயலகத்திற்குற்பட்ட 44 செய்கையாளர்களுக்கு ஒரு தென்னைக்கு 100ரூபா வீதம் காசோலை வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது புளியம்பொக்கணை கமநலசேவை நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.
தென்னைப்பயிர்ச்செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் இந்த காசோலையை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் பிராந்திய முகாமையாளர் ஈ.சற்குணன், கண்டாவளை பிரதேசத்திற்குரிய தென்னை பயிர்ச்செய்கை சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.ஜெயேந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் 205200ரூபா பெறுமதியான காசோலை வழங்கப்பட்டது. இதே வேளை ஏழு பயனாளிகளுக்கு கப்ருக்க திட்டத்தின் மூலம் கடனுக்கான காசோலையும் வழங்கப்பட்டது.