பொல்கஸ்ஸோவிட்ட – மத்தேகொடை வீதியில் சியம்பலாகொட பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (08) இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
18 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, உந்துருளியின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரும் காயமடைந்த நிலையில் வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உந்துருளியின் செலுத்துனர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.