அம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் உள்ள ஆற்றில் தவறி வீழ்ந்து நேற்று புதன்கிழமை (08) மாலை ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அம்பலாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.
சம்பவத்தன்று, உயிரிழந்த நபர் மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.