தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (07) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிசை பிரதேசத்தில் வசிக்கும் 28 மற்றும் 46 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை, சுமுது ராஜபக்ஷ மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 56 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், படோவிட்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து ஒரு கிலோ 320 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.