கிளிநொச்சி, முகமாலைப் பகுதியில் வீதியில் தேங்கிக் காணப்பட்ட வெள்ள நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
முகமாலை வடக்கு, பளையைச் சேர்ந்த மாணிக்கம் உதயகுமார் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் முகமாலை வடக்கு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த வீதியால் பயணித்தபோது வீதியில் தேங்கிக் காணப்பட்ட வெள்ள நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.