குரங்கை பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கும் முயற்சியில் குரங்கை பிடிப்பதற்கான கூடு ஒன்றை கிளிநொச்சி விவசாயி தயாரித்துள்ளார்.
குரங்குகளினால் பல விவசாய உற்பத்திகள் அழிவடைகின்றன. இதனால் விவசாயிகள் பலர் தமது உற்பத்தியில் நஷ்டமடைகின்றனர். கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியைச் சேர்ந்த ஐயாக்குட்டி புண்ணியமூர்த்தி என்ற விவசாயி தனது உற்பத்தியை அழிக்க வரும் குரங்குகளை பிடிப்பதற்கான கூண்டு அமைத்து அதனுள் குரங்குகளை பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கும் நோக்குடன் கூடு ஒன்றை தயாரித்து குறித்த கூட்டில் குரங்குகளை பிடிக்கும் முயற்சியில் இன்று பரீட்சாத்தமாக ஈடுபட்டார்.
குரங்குகளினால் பல விவசாயங்கள் அழிவடைந்துள்ளதாகவும் இதனால் திரும்ப விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையால் குரங்குகளை உயிரோட பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கும் நோக்குடன் இதை செய்திருந்தேன் எனக் குறிப்பிட்டார். ஜனாதிபதியும் குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரித்தார்.