தர்மபுரம் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய உந்துருளியில் பயணித்த குறித்த சந்தேகநபரை சோதனையிட்ட போது அவரது உடமையில் இருந்த 95 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 12.800 ரூபாய் பணமும் மற்றும் சந்தேக நபர் பயன்படுத்திய உந்துருளியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரை இன்றைய தினம் 07.01.2024 கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம். சதுரங்க தெரிவித்துள்ளார்.