கிறீன்லேயர் சுற்றுச்சூழல் அமைப்பின் அனுசரணையில் பருத்தித்துறை பிரதேச சபை கிராம மட்ட அமைப்புக்களுடன் இணைந்து வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இன்று (6) மரக்கன்றுகளை நாட்டிவைத்தன
கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பருத்தித்துறை பிரதேச சபையின் செயலாளர் அ.வினோராஜ் தலைமையில் இன்று மாலை 4.00 நிகழ்வு ஆரம்பமானது.
நிகழ்வின் போது பொது இடங்களில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன் பொது மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.தற்போதுவரை 150 மரங்களும்,35000 பனை விதைகளும் நாட்டப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் வடமாகாண பனை,தென்னை அபிவிருத்தி சபை தலைவர் திரு.V.சகாதேவன் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி கிறீன்லேயர் அமைப்பின் ஸ்தாபகர் த.சசிக்குமார் முள்ளியான் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு வைத்தியர் Dr.யோ.திவ்யா தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவனின் வடமராட்சி கிழக்கு இணைப்பாளர்களான ச.கிருஷ்ணராஜா,கு.உதயபாஸ்கரன் கட்டைக்காடு கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் ஞா.ஞானராஜ் நித்தியவெட்டை கிராம அபிவிருத்தி சங்எ தலைவர் த.சசிகரன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.