05-01-2025 அன்று திருகோணமலைக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுசேனா ரணதுங்க தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். தனது விஜயத்தின் போது, நிலாவெளி கோபாலபுரத்தில் உள்ள மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மீன்பிடி அமைப்புகளுக்கு வலைகளுடன் கூடிய 10 மீன் பிடி படகுகளை (கேனோன்- Canoes) கையளித்தார்.
மீதமுள்ள 20 மீன் பிடி படகுகளை கல்லடி விநாயகர் மீன்பிடி கூட்டுறவு சங்கம் மற்றும் ஈச்சிலம்பத்தையில் உள்ள இலங்கத்துறை ஸ்ரீ செண்பக மீன்பிடி கூட்டுறவு சங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.
இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ. 5.4 மில்லியன்.
தலைவர் – சேவை திட்டம் PP PHF சிவசங்கர் இத் திட்டத்தை ஒருங்கிணைத்தார்.
தலைவர் ஜெகதீஷ் அவர்களுடன் திருகோணமலை றோட்டேரி அங்கத்தவர்கள் கலந்துகொண்டார்கள்.