அத்துருகிரிய – முல்லேகம பிரதேசத்தில் நேற்றைய தினம் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெடிகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் இருந்து 6 கிராமும் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.