கொட்டகலை பிரதேசத்தில் குடுஓயா கிராமசேவகர் பிரிவில், 475 ஏ, கொட்டகலை கொமர்ஷலில் அமைந்துள்ள கடைக்கு முன்பாக இன்று காலை 09.40 மணியளவில் கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த உந்துருளியும் ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
உந்துருளியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புலபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விபத்தில் ஸ்டோன்கிளிப் தோட்டம், கொட்டகலை பகுயை சேர்ந்த மலித் குமார் எனும் 24 வயதுடைய நபரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.