ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிகில்லகஸ்கட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) கொங்கிறீட் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எஹலகஸ்தென்ன, மதுரட்டா பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரே உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த நபரை ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலைய அதிகாரிகளால் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சடலம் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹங்குரன்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.