முல்லைத்தீவு – நெடுங்கேணி தண்டுவான் வெள்ளைப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலைக்கு ஏற்கனவே இருந்த கட்டிடத்தினை சூழவுள்ள இரு பக்க கொட்டகைகள் புதிதாக 950,000 ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டு அறநெறிப் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
05/01/2025 ந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணியளவில் அறநெறிப் பாடசாலை இணைப்பாளர் திரு.அ.சுகந்தன் அவர்களின் தலைமையில் இந்த கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தை சார்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ஜதீஸ், கிராம சேவையாளர் செல்வி.லினிசா மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.