பொலிஸ் அதிகாரிப் போல் நடித்து வர்த்தகர்கள் உள்ளிட்டோரை மிரட்டி பண மோசடி செய்த சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பொரளை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சமூக ஊடகங்கள் மூலமாக பணத்தை மோசடி செய்ய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தியுள்ளார்.
வர்த்தகர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, பொய் புகார் அளித்து, துணை பொலிஸ் கண்காணிப்பாளர் போல் நடித்து, வழக்குப் போடுவதாக மிரட்டி, பணம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.