கிளிநொச்சி கோரக்கன் காட்டுப்பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் நேற்று சனிக்கிழமை (04) உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இந்த நபர் வீடொன்றில் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில் திருத்த வேலை செய்து கொண்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
பிரான்சித் ரஜீவன் என்ற 31வயதுடைய வயிரவர் கோவிலடி பரந்தனைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.