ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் அவர்களால் முன்னாள் போராளி ஒருவரின் குடும்பத்தினருக்கு உதவிகள் நேற்று (4) வழங்கி வைக்கப்பட்டன.
ஆறு வருட காலமாக சுகவீனமுற்று படுக்கையில் வாழ்ந்து வரும் புத்தூரை சேர்ந்த முன்னாள் போராளி அகிலன் அவர்களுக்கு அவரின் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு அமைய காலையடி உதவும் கரங்கள் அமைப்பின் பங்களிப்பில் அவருக்கு தேவையான பால்மா, உடல் சுத்தமாக்குவதற்கான பொருட்கள், மருந்து பொருட்கள், உணவுப்பொருட்கள் மற்றும் ரூபா 7500/= பணம் உட்பட ரூபா 50000/= பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் என்பன ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த உதவியினை அவரது இல்லத்திற்கு நேற்று சென்று சி.வேந்தன் அவர்கள் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
