திருகோணமலை சமுத்திராகம கடற்கரை பகுதியில் இன்று (04) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
திருகோணமலை, ஆண்டங்குளம், அசோக மாவத்தையை சேர்ந்த, 53 வயதான ரம்பண்டா முடியன்சலாகே அஜித் பிரசன்னா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்போது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பாக, மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.