ஊர்காவற்துறை பகுதிக்கு நேற்றையதினம் (03) விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் ஊர்காவற்துறை இறங்கு துறையை பார்வையிட்டனர். அத்துடன் ஊர்காவற்துறையில் அமைந்துள்ள படகு திருத்தும் நிலையத்தை பார்வையிட்டனர்.
அந்த படகு திருத்தும் நிலையமானது கடந்த அரசாங்கத்தினால் 2021ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட நிலையில் செயலிழந்து காணப்படுகிறது.
அதில் இதுவரை ஒரு படகு மட்டுமே ஏற்றப்பட்டு காணப்படுவதாகவும், அந்த படகு திருத்தும் நிலையத்தை இயங்க வைப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாவும் அவர்கள் தெரிவித்தனர்.