வெலிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) ஆரம்பமாகும் இலங்கை – நியூஸிலாந்து அணிக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் நாள் தொடரின் முதல் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகள் பெரும்பாலும் விற்றுத் தீர்ந்து விட்டன.
அதேநேரம், 500 நுழைவுச் சீட்டுகள் மாத்திரம் இன்னும் எஞ்சியுள்ளதாக நியூஸிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மைதானத்தின் மொத்த இருக்கை கொள்ளளவு வழக்கமான டெஸ்ட் போட்டிகளுக்காக 6400 ஆகும்.
எனினும் இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளுக்காக அது 6800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வெலிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில் தொடங்கும் ஆட்டமானது சுமார் நான்கு ஆண்டுகளின் பின்னர் நியூஸிலாந்து விளையாடும் முதல் ஒருநாள் போட்டியாகும்.
இறுயாக 2024 மார்ச் 26 அன்று இதே மைதனாத்தில் பங்களாதேஷுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து 164 ஓட்டங்களினால் வெற்றி பெற்றிருந்தமையும் குறிப்படத்தக்கது.