திருகோணமலை வானெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளம் ஒன்றிலிருந்து நேற்றையதினம்(2) ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வானெல பகுதியைச் சேர்ந்த 40 வயதான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடந்த 31ஆம் திகதி மாலை, விருந்தொன்றுக்கு சென்று வருவதாக உந்துருளியில் சென்றவர் என்று ஆரம்பகட்ட விசாரணையிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
