மன்னார், மடு பிரதேச அபிவிருத்தி குழுவின் புது வருடத்திற்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு ஒன்று கூடலானது இன்றைய தினம் 3/1/2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கலந்துகொண்ட மடு பிரதேசத்திற்கான இப் புதிய ஆண்டின் முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது இன்றைய தினம் இடம்பெற்றது.
மடு பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பல்வேறுபட்ட விடயங்கள் இதில் கலந்துரையாடப்பட்டது. கடந்த வருடத்தில் நடைபெற்று முடிந்த வேலைத்திட்டங்கள், Clean Sri Lanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.
மேலும் இக் கூட்டத்தில் அரச திணைக்கள அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், மாகாண சபை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .