மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரண்திய பகுதியில் நேற்று (02) போதைப்பொருட்களுடன் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 ,31,25 மற்றும் 26 வயதுடையவர்களாவர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாதம்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களிடமிருந்து 36 கிராம் 550 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றைய இரு சந்தேகநபர்களிடமிருந்து 10 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், மாதம்பிட்டிய பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.