அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணை மற்றும் 2024 க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான கல்வி அமைச்சின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் கல்வித் தவணைகள் கட்டம் கட்டமாக நடாத்தப்படும்.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடாத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதேநேரம், 2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் அல்லது நவம்பர் 2025 இல் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலை கல்வித் தவணைகள்
முதலாம் தவணை:
முதல் கட்டம் – 2025 ஜனவரி 27 தொடக்கம் மார்ச் 14 வரை
இரண்டாம் கட்டம் – 2025 ஏப்ரல் 01 தொடக்கம் ஏப்ரல் 11 வரை
மூன்றாம் கட்டம் – 2025 ஏப்ரல் 21 தொடக்கம் மே 09 வரை
இரண்டாம் தவணை:
முதல் கட்டம் – 2025 மே 14 தொடக்கம் ஆகஸ்ட் 07 வரை
மூன்றாம் தவணை:
முதல் கட்டம் – 2025 ஆகஸ்ட் 18 தொடக்கம் ஒக்டோபர் 17 வரை
இரண்டாம் கட்டம் – 2025 நவம்பர் 17 தொடக்கம் டிசம்பர் 19 வரை
முஸ்லிம் பாடசாலை கல்வித் தவணைகள்
முதலாம் தவணை:
முதல் கட்டம் – 2025 ஜனவரி 27 தொடக்கம் பெப்ரவரி 28 வரை
இரண்டாம் கட்டம் – 2025 ஏப்ரல் 01 தொடக்கம் ஏப்ரல் 11 வரை
மூன்றாம் கட்டம் – 2025 ஏப்ரல் 21 தொடக்கம் மே 23 வரை
இரண்டாம் தவணை:
முதல் கட்டம் – 2025 மே 28 தொடக்கம் ஆகஸ்ட் 19 வரை
மூன்றாம் தவணை:
முதல் கட்டம் – 2025 ஆகஸ்ட் 25 தொடக்கம் ஒக்டோபர் 31 வரை
இரண்டாம் கட்டம் – 2025 நவம்பர் 17 தொடக்கம் டிசம்பர் 19 வரை