சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் மறுசீரமைப்பு நடவடிக்கை இந்த மாதத்திலிருந்து ஆரம்பமாகும் எனவும், கட்சித் தலைமைப் பதவியில் மாற்றம் வராது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் வேலைத்திட்டம் இந்த மாதத்திலிருந்து முன்னெடுக்கப்படும். கட்சியின் விசேட கூட்டமும் நடத்தப்படும். கட்சி மறுசீரமைப்புப் பணியும் ஆரம்பமாகும். சில பதவிகளில் மாற்றம் வரும். அது மக்கள் எதிர்பார்க்கும் மாற்றமாக இருக்கும்.
கட்சித் தலைமைப் பதவியில் மாற்றம் வராது. ஆனால், தனக்குள்ள பலவீனங்களை இனங்கண்டு அவற்றைச் சரி செய்வதற்குரிய நடவடிக்கையில் கட்சித் தலைவர் ஈடுபட வேண்டும். மக்கள் அதனையே எதிர்பார்க்கின்றனர்.
அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைப்பு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.