கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியின் கண்டாவளை பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு அருகாமையில் உள்ள பாலத்தின் புணரமைப்பு பணிகள் பல வருட காலமாக கைவிடப்பட்ட நிலையில், குறித்த பாலத்தின் ஊடாக முல்லைத்தீவு பரந்தன் நோக்கி பயணிக்கும் அதிகளவான பயணிகள் இரவு நேரத்தில் பெரும் அசௌகரியங்களை மேற்கொள்வதாகவும், பலர் வீதி விபத்துக்களில் காயமடைந்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் பரந்தன் பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த உந்துருளியானது புணரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்ட பாலத்தின் உட்பகுதியில் விழுந்ததன் காரணமாக இருவர் மரணித்துள்ளனர்.
ஜெய்க்கா வீட்டுத்திட்டம் இக்பால் நகர் நிலா ஒளி பகுதியைச் சேர்ந்த அண்டன் சாந்தன் எனும் 23 வயதுடையவரும், அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சசிகரன் சிம்புரதன் இக்பால் நகர் நிலா ஒளி திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இருவரின் சடலங்கலே மீட்கப்பட்டது.
அத்துடன், அவர்கள் பயணித்த உந்துருளியும் இறந்தவர்களிடமிருந்த 71 100ஆயிரத்து நூறு ரூபாய் பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இவர்களது சடலம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஸ்மால்ஜெமின் அவர்கள் முன்னிலையில் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.