போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளமான E-Traffic செயலியானது நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் (IGP), சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
e-Traffic செயலியானது போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் தொடர்புடைய சம்பவங்களை நிகழ்நேரத்தில் புகாரளிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கிறது.
பயன்பாட்டின் கேமரா மற்றும் வீடியோ விருப்பங்களைப் பயன்படுத்தி பயனர்கள் குற்றங்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவேற்றலாம்.
இத்திட்டத்துக்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் 607 பொலிஸ் நிலையங்களில் விசேட போக்குவரத்து அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். e-Traffic கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்துவதன் மூலம் தினசரி இடம்பெறும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் இதற்கு தமது ஆதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. e-Traffic செயலியின் மூலம் காணொளிகளை பதிவேற்றுவதுற்கான வசதிகளும் காணப்படுகின்றது.
ஆகையால் பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அதனை ஒத்த பிற சம்பவங்களுடன் தொடர்புடைய புகைப்படங்கள், காணொளிகளை இக்கணக்கை பயன்படுத்தி பொலிஸ் தலைமையகத்துக்க வழங்க முடியும்.
அவ்வாறு மக்களால் வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் மற்றும் பிற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணை மேற்கொண்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த தகவலை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் பிரிவுகளுக்கும் வழங்கும். அத்தோடு அவை தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் தலைமையகத்தின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறும் என்றார்.
இந்த சமர்ப்பிப்புகள் உடனடி நடவடிக்கைக்காக காவல்துறை தலைமையகத்திற்கு நேரடியாக அனுப்பப்படும்.
இந்த செயலியை இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.police.lk)(http://www.police.lk) பதிவிறக்கம் செய்யலாம்.