எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்:
“மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொடுக்க சுமார் 4 மாத காலங்கள் தேவைப்படுகிறது. அதனை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏப்ரல் மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட முடியும் என நினைகிறேன்” என்றார்.