பொலன்னறுவை, வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (30) மாலை இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
அரிசி மூடைகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தியும் வெற்றிலைகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் போது ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT
மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.