தற்போது ஆட்சியிலுள்ள அனுர அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறின் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும் என காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அவர் அவர் இன்று சனிக்கிழமை வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது தமது காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் அரச நிர்வாகிகள், அரசாங்கத்தை அணுகி அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு கோரவுள்ளதாகவும், அவ்வாறு விடுவிக்கவில்லை எனில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும ஒன்று திரண்டு ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளதாவும்தெரிவித்த இ. முரளிதரன், புதிய. அரசு ஆட்சிக்கு வருமுன் வழங்கிய வாக்குறுகளை நிறைவேற்றும் என்று தாம் நம்புவதாகவும் , புதிய அரசாங்கம் புதிய உறுப்பினர்கள் ஏன்பதனால் அவர்களுக்க கால அவகாசம் தேவைப்படலாம் என்பதன் அடிப்படையில் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை கையளிக்கவுள்ளதாகவும், தெரிவித்த முரளிதரன் அதற்காக அபகரித்த காணிகளை விடுவிப்பதற்காக பாதிக்கப்பட்டவர்களை ஒன்று கூட்டி நிர்வாக கட்டமைப்புககளை உரவாக்கிவருவதாகவும் அவர் மேலும் தெவிததார்.