சங்கப்பட்டி பாலத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் அங்கு தரமற்ற வேலைகள் நடைபெறுவதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்நிலையில் இன்றையதினம் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வேலைகளின் தரம் குறித்தும், மூலப்பொருட்களின் தரம் குறித்தும் பார்வையிட்டதுடன் வேலையில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.