நுவரெலியா, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகல தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நுவரெலியா, பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.
பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.