அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேகம பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அளுத்கம முகாமின் அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதான கனேகம, அளுத்கம பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 110 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக அளுத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.