பல்லேகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நத்தரம்பொத பிரதேசத்தின் மகாவலி கங்கையில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் 69 வயதுடைய கொலொங்கஹவத்த, கெங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கடந்த 26ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தெல்தெனிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.