மாத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சேவையாற்றிய இரண்டு இளைஞர்கள் சுது கங்கையில் வீழ்ந்து உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன.
நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வலையில் சிக்கியிருந்த பீப்பாய் ஒன்றை அகற்ற முற்பட்ட ஒருவர் வழுக்கிச் சுது கங்கையில் வீழ்ந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக மற்றைய இளைஞர் முயற்சித்துள்ளார். இதன்போது, இருவரும் நீரால் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
ADVERTISEMENT
சம்பவத்தில் மாத்தளை களுதாவளை மற்றும் கிவுல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே உயிரிழந்தனர்.