அவுஸ்திரேலியா கடற்கரையில் இன்று (28) சுறா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து கடற்கரையில் குடும்ப உறுப்பினர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கழுத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டு இதுவரை அவுஸ்திரேலியா கடல் பகுதியில் குறைந்தது நான்கு சுறா தாக்குதல்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.