இன்றையதினம் ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் 5 ஆயிரத்து 830 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயிரத்து எழுபது மில்லிக்கிராம் ஹெரோயின் என்பவற்றுடன் 41 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திரு.விஜயதர்சனவின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.