கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா அவர்கள் இன்றைய தினம் 28.12.2024 ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இதன் போது ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
இலங்கை டி ஐ டி அவர்களால் ஒன்பதாவது முறையாக கொழும்பு நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு கட்டளை தரப்பட்டது 26 ஆம் 27ஆம் திகதி என்னை கொழும்பு வரச்சொல்லி எனது சுகயீனம் காரணமாக நான் கலந்து கொள்ளவில்லை.
உண்மையாகவே என்னை போன்று எத்தனையோ பேருக்கு கொழும்புக்கு அழைப்பானை வருகிறது. ஒரு நபர் வந்து போக மொத்தத்தில் 25 ஆயிரம் ரூபாய் தேவை. ஆகவே இதை கருத்திற் கொண்டு வந்து எமது பொலிஸ்மா அதிபர் அவர்கள் ஒவ்வொரு விசாரணைகளையும் எமது மாவட்டத்திலே செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படியான அழைப்பு கட்டளைகளால் புலம்பெயர் தேசத்தில் உள்ள உறவுகள் இந்த நாட்டுக்கு வருவது குறைந்து வருகிறது. உண்மையாகவே இலங்கை தீவு ஒரு சுற்றுலா துறையை நம்பி இருக்கிறது. தற்பொழுது நடைபெறுகின்ற இப்படியான டி ஐ டி விசாரணைகள் தொடர்பான தகவல்கள் வெளிவரும் போது இந்த நாட்டுக்கு சுற்றுலா துறையினர் வருவது குறைந்து விடும்.
பொதுவாக ஒரு முகநூலில் தேசிய தலைவரின் படம் வந்தால் அவர்களுக்கு விசாரணை. ஒட்டுமொத்தத்தில் தமிழர்கள் ஒரு மூடிய சிறைச்சாலையில் தான் வாழ்கிறார்கள். இப்பொழுது ஜனாதிபதி ஆட்சிக்கு வர முதல் பயங்கரவாத சட்டத்தை எதிர்த்த ஒரு நபர் இன்று அந்த ஆட்சி பீடத்தில் எறிவிட்டு பழைய முறைகளை தான் அவரும் செய்கிறார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு அதிகமான தமிழ் இளைஞர்கள் விசாரணை என்ற போர்வையில் பயமுறுத்தப்படுகிறார்கள். இந்த நிலையால் இளைஞர்கள் எல்லோரும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். நாட்டில் பிரச்சனை இன்னும் தீரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
எமது நாட்டில் கதைப்பதற்கு மட்டும்தான் போன் பாவிக்கலாம் என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. அதை முதலில் இந்த ஜனாதிபதி செய்தால் நன்றாக இருக்கும். இது ஒரு ஜனநாயக நாடு கிடையாது. ஒரு ஜனநாயகமாக பேச முடியாது, ஒரு ஜனநாயகமாக ஒரு பதிவை பதிவிட முடியாது, அப்படித்தான் நமது மக்கள் நமது இளைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒரு நல்ல தீர்வினை தர வேண்டும். பொலிஸ்மா அதிபருக்கும், மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கும் நான் விரயமாக கேட்டுக்கொள்கிறேன் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா தெரிவித்தார்.