அக்கரப்பத்னை பெல்மோரல் பெரிய நாகவத்தை தோட்டத்தில் கொழுந்து மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த எட்டு பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி அக்கரபத்தனை மன்ராசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று மதியம் 2 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
ADVERTISEMENT
மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்தது குளவிகள் கலைந்து கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது தாக்கி உள்ளது.
குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் மன்ராசி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு பேரில் நால்வர் சிகிச்சையின் பின்பு வீடு திரும்பியதோடு ஏனைய நான்கு பேரும் தொடர்ந்து தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.