சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்ட நிலையில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.
மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு, இரண்டு நிமிட அக வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றது. பின்னர் 30 மாணவர்களுக்கு பெறுமதி மிக்க கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ப.கேசவதாசனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் இதில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர்கள், முன்னைநாள் பணிப்பாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.