வவுனியா வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் இறுதி ஆண்டிற்கான அபிவிருத்தி குழுக் கூட்டம் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பிரதி அமைச்சர் ஆர்.எச் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.ஜெகதீஸ்வரன், எஸ்.திலகநாதன், எம்.ஐ.முத்துமுகமது ஆகியோருக்கும் பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் பொது அமைப்புகள் ஆகியோருக்கும் இடையில் இக் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
இதன் போது வனவள திணைக்களம், கல்வி, விவசாயம், கால்நடை, வீதிகள். போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.