அநுராதபுரம், நொச்சியாகம குடாவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத உள்நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (26) நொச்சியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் நொச்சியாகம,குடாவெவ,அம்பகஹவெவ பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.
நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சட்டவிரோத துப்பாக்கியை பயன்படுத்தி பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் நடாத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.