காலி, மாத்தறை, அம்பலாந்தோட்டை மற்றும் சூரியவெவ பொலிஸ் பிரிவுகளில் 09 உந்துருளிகளை திருடிய 04 சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 38, 39, 52 மற்றும் 58 வயதுடைய கிந்தோட்டை, காலி, மாத்தறை மற்றும் சூரிய வெவ பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அம்பலாந்தோட்டை, ஹுங்கம பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியிருந்த உந்துருளி திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேக நபர்களிடமிருந்து 09 உந்துருளிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.