கிளிநொச்சி 55காலாற்படையினரின் ஏற்பாட்டில் நத்தார் தின நிகழ்வு கிளிநொச்சி நெலும்பியச வில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, சர்வமத தலைவர்கள் ,வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பொலிஸ்மா அதிபர், இராணுவ உயரதிகாரிகள், மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்ட தேவாலயங்களின் கரோல் இசை அணியினரின் கரோல் கீதங்கள் நத்தார் தினத்தை அலங்கரித்தன.